கன்னியாகுமரி காங். எம்.பி வசந்தகுமார் காலமானார்: அதிர்ச்சி தகவல்

வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (19:17 IST)
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சற்றுமுன் தகவல் வெளி வந்தது தெரிந்ததே 
 
இந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் சற்று முன் வெளியிட்ட தகவலின்படி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் காலமானார்,. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை அறிவித்துள்ளது
 
70 வயதான கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் காலமான தகவல் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் கொரோனாவுக்கு பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்