ராகுல் காந்தியை புகழ்ந்ததால் அதிருப்தி.. செல்லூர் ராஜூ மீது ஈபிஎஸ் நடவடிக்கையா?

Siva

செவ்வாய், 21 மே 2024 (15:43 IST)
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை புகழ்ந்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுவது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உணவு உண்ணும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நான் விரும்பும் தலைவர் என்றும் எளிமையான தலைவர் என்றும் பதிவு செய்திருந்தது பரபரப்பு ஏற்படுத்தியது.

ஏற்கனவே விஜய்யை புகழ்ந்து அவர் பதிவு செய்தது கட்சி தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் தற்போது திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் பிரமுகரை புகழ்ந்து பதிவு செய்ததற்கு தலைமை அதிருப்தி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் செல்லூர் ராஜூ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் கூறி வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் அவரிடம் விளக்கம் கேட்டு கேட்கப்படும் என்றும் அதன் பின்னர் அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து யோசிக்கப்படும் என்றும் கூறியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்