அதிமுக ஆட்சியில் தொடங்கிய காரணத்தினால் தான் சில நீர்வள திட்டங்களை திமுக அரசு கைவிட்டது என்றும் தற்போது வறட்சிக்கு அது தான் காரணம் என்று இபிஎஸ் குற்றம் சாட்டு தெரிவித்தார். குறிப்பாக அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் மீதம் இருக்கும் பதினைந்து சதவீத பணிகளை முடிக்காமல் மூன்று ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளனர் என்றும் அதனால் தான் தமிழ்நாடு வறட்சியால் தத்தளித்து வருகிறது என்றும் அவர் கூறினார்
புதிய பேருந்துகள் வாங்குவதாக திமுக பொய் சொல்கின்றனர் என்றும் மின்சார பேருந்துகளுக்கு அதிமுக ஆட்சியில் ஜெர்மனியுடன் ஒப்பந்தம் போடப்பட்டது என்றும் அதிமுக ஆட்சியில் தான் 14500 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டன என்றும் பழைய பேருந்துகள் சீரமைப்பது மட்டுமே திமுக செய்து வருகிறது என்றும் அரசு பேருந்துகளில் பயணிகள் மிகவும் அச்சத்துடன் பயணம் செய்து வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.