பிளஸ் 2 கணித தேர்வில் தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண் உண்டா? தேர்வுத் துறை விளக்கம்..!

ஞாயிறு, 9 ஏப்ரல் 2023 (09:32 IST)
பிளஸ் டூ கணித தேர்வில் தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண் உண்டு என தேர்வுத்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இதில் கணித தேர்வில் ஐந்து வினா மதிப்பெண் வினா ஒன்று தவறாக இருந்ததாக மாணவ மாணவிகள் தெரிவித்தனர். 
 
இதனை அடுத்து இந்த கேள்விக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்ப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து தேர்வு துறை கூறிய போது பிளஸ் டூ கணித பாடப்பிரிவில் 5 மதிப்பெண் வினாவில் இடம் பெற்ற 47 b என்ற தவறான கேள்வியை மாணவர்கள் எழுத முயற்சி செய்திருந்தால் அந்த கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. 
 
ஏற்கனவே இந்த ஆண்டு கணித தேர்வு கடினமாக இருந்ததாக கூறப்பட்ட நிலையில் கருணை மதிப்பெண் அறிவிப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்