ஸ்மார்ட் சிட்டியின் அவல நிலை: சாக்கடை அடைப்பு - கழிவுநீர் உற்பத்தியாகும் கொசு பூச்சிகள் நோய் பரவும்

செவ்வாய், 20 ஜூன் 2023 (12:09 IST)
கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதனால் கழிவுநீர் சாக்கடை, பாதாள சாக்கடை குழாய்கள் ஆங்காங்கே அவ்வப்போது அடைப்புகள் ஏற்பட்டு கழிவு நீர்கள் சாலையில் செல்கிறது. 
 
இந்நிலையில் கோவை 32 வது வார்டு தில்லை நகர் சுந்தரப்ப கவுண்டர் வீதியில் பல ஆண்டுகள் ஆகியும் சாக்கடை தூர்வாரப்படாததால், அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வீட்டிற்குள் புகுந்தும் சாலைகளில் தேங்கி நிற்கிறது. அந்தக் கழிவு நீரால் கொசுக்கள் பூச்சிகள் பெருகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு, அப்பகுதி மக்கள் பாதிப்படைந்து வருகின்றன. 
 
பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத சாக்கடையால் அப்பகுதியில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் கழிவு நீரை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்பதே அப்பகுதியில் மக்களின் பல நாள் கோரிக்கையாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்