தயவு செய்து புது குவாரி வேண்டவே, வேண்டாம் !அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்களால் பரபரப்பு.

சனி, 7 ஜனவரி 2023 (23:33 IST)
ஐயா கையெடுத்து கும்புட்றோம், தயவு செய்து புது குவாரி வேண்டவே, வேண்டாம் – கருத்து கேட்பு கூட்டத்தில் சப்தம் போட்டு அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்களால் பரபரப்பு.
 
கரூர் மாவட்டம் என்றாலே, சட்டவிரோத கனிம சுரண்டல்கள் நாள்தோறும் சரி, வருடந்தோறும் நடந்து வரும் நிலையில், தமிழக அளவில் இதனால் அதிகம் வெப்பம் வாய்ந்த பகுதியாகவே கரூர் மாவட்டம் உள்ளது. இங்கு ஒரு புறம் கிரானைட் குவாரி, கல்குவாரி, சுண்ணாம்பு குவாரி, கிரஷர் குவாரிகள் என்று பல்வேறு குவாரிகள் அரசு அனுமதியுடனும், அரசு அனுமதி இல்லாமலும் இயங்கி வரும் பட்சத்தில் இந்த குவாரியால் சமூக செயற்பாட்டாளர் ஜெகநாதன் என்ற விவசாயி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குவாரி உரிமையாளர்களால் வாகனம் ஏற்றி கொலை செய்யப்பட்ட நிகழ்வு இந்திய அளவில் சமூக செயற்பாட்டாளர்களிடம் கடும் அதிர்ப்தி நிலவியது. இந்நிலையில், புதிய கிரானைட் குவாரி ஒன்று கரூர் அருகே செயல்படுவதற்காக பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் நிகழ்ச்சி கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் தலைமையில், கரூர் மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரி முன்னிலையிலும் கரூர் அடுத்த பிச்சம்பட்டி பகுதியில் புதிய க்ரானைட் குவாரி இயங்க அனுமதிக்காக, பொதுமக்கள் கருத்து கேட்பு நடந்தது. 
 
கரூர் வட்டம், வெள்ளியணை பகுதிக்கு முன்னதாக அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில், அந்த ஊரில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல், ஊரை விட்டு வேறு ஊரில் ஏன் நடத்த வேண்டுமென்ற பஞ்சாயத்து ஒரு புறம் இருக்க, அதே ஊரில் அந்த குவாரி அமையுமிடத்தில் பொய் கையெழுத்து போட்டு ஒரு விவசாயி ஒருவரிடம் நிலத்தினை வாங்கிய விவகாரம் அனைத்தும் சூடுபறக்க விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்க, அந்த ஊர் மக்கள் பலரும் எழுந்து இந்த கருத்து கேட்பு கூட்டம் வேண்டாம் என்றும் அதிகாரிகளை முற்றுகையிட முயன்றனர். இதே நிலையில், அவர்கள் ஏற்கனவே கூட்டத்தில் கலந்து கொள்ள முற்பட்ட போது அவர்கள் கையெழுத்து போட்ட நோட்டினை கையெடுத்து கும்புட்றோம், அதை எங்களிடம் கொடுத்து விடுங்கள், எங்களுக்கு எழுத படிக்க தெரியாது ஆகவே, இந்த கூட்டம் வேண்டவே, வேண்டாம் என்றும் காரசார விவாதங்கள் நடைபெற அந்த நோட்டினை ஒரு அதிகாரி, நான் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கொடுத்து விடுகின்றேன் அதை நீங்கள் வாங்கி கொள்ளுங்கள் ஆளை விடுடா சாமி என்று கும்பிடு போட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திட, சமூக செயற்பாட்டாளர் முகிலன், கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே நாம் இதை செய்து இருக்கலாம், ஆகவே அரசிற்கு நாம் எதிர்ப்பினை தெரிவித்து அதன் மூலம் நமது கருத்தினை பதிவு செய்யலாம் என்றும் மீறி அதே இடத்தில் க்ரானைட் குவாரி அமைந்தால் நீதிமன்றத்தினை நாம் நாடலாம் என்றும் ஒரு சேர முடிவு எடுத்தனர். 
 
இது ஒரு புறம் இருக்க, செய்தியாளர்களுக்கு இறுதியில் பேட்டியளித்த சமூக செயற்பாட்டாளர் முகிலன், கடந்த ஆட்சியின் போது தேர்தல் பரபரப்புரையின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சி அமைந்தால், அரசே கனிம வளத்தினை எடுத்து நடத்தும் என்றும், கல்குவாரி, கிரானைட் குவாரிகள் அனைத்தும் அரசே நடத்தும் என்றும் வாக்குறுதிகள் அளித்தும் இன்றுவரை அவர் நடவடிக்கை எடுக்காதது ஏனோ என்றும் கேள்வி எழுப்பினார்.
 
இதுமட்டுமில்லாமல், ஒரு விவசாயி ஒருவரது நிலத்தினை அபகரித்து அது நீதிமன்றத்தில் வழக்கு விவாதத்தில் இருக்கும் போது இந்த குவாரி கருத்து கேட்பு நடப்பதே தவறு என்றும், மீறி அந்த இடத்தில் குவாரி அமைந்தால் பல்வேறு போராட்டங்களை தமிழக அரசும், கரூர் மாவட்ட நிர்வாகமும் சந்திக்கும் என்றும் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்