சிறையில் பியூஷ் மீது தாக்குதல்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

ஞாயிறு, 24 ஜூலை 2016 (17:21 IST)
சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ், காவல்துறையினரால் சிறையில் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறிய புகாரில் தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

 

 

மக்களிடம் முறையாக நோட்டீஸ் வழங்காமல், சேலம் முள்ளுவாடி பகுதியில் பாலம் கட்டும் பணிகளை மேற்கொண்டதாகக் கூறி சேலம் மக்கள் குழுவினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து  ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பியூஷ் மனுஷ் உள்ளிட்ட சிலரை கடந்த ஜூலை 8 ந்தேதி காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனிடையே கடந்த  20ந்தேதி பியூஷ் மனுஷின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஜாமீனில் விடுதலையான அவர், பத்திரிகையாளர்களிடம், சிறையில் தன்னை 30 காவலர்கள் சேர்ந்து அடித்து துன்புறித்தியதாக புகார் தெரிவித்தார். 

இதுகுறித்து புகார் பதிவு செய்துகொண்ட தேசிய மனித உரிமை ஆணையம், இதுதொடர்பாக 2 வாரத்திற்குள் தமிழக டி.ஜி.பி மற்றும் தலைமைச் செயலாளர் இருவரும் பதிலளிக்க விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்