ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு.. சென்னையில் பரபரப்பு..!

புதன், 25 அக்டோபர் 2023 (16:47 IST)
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  
 
இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டை வீசியதாக கைது செய்யப்பட்டுள்ளார். தேனாம்பேட்டை சேர்ந்த வினோத் என்பவரை பிடித்து போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்
 
 அவரிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில்  இருந்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்ததாக கூறப்படுகிறது  ஏற்கனவே பாஜக அலுவலகம் மீதும் குண்டு வீசியவர் இவர் தான் என்று போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்