நேற்று, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களையும், பொதுமக்களையும் போராட்டக் களத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். பல்வேறு இடங்களில் காவல்துறையே வாகனங்களை கொளுத்திய காட்சிகள் இணையத்தில் வெளியானது. காவல்துறையின் இந்த செயலைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார் நடிகர் கமல்.