ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் தான் கோடை காலம் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு மட்டும் பிப்ரவரி மாதம் முதல் வெயில் கொளுத்தி வருகிறது. மேலும், வெப்பம் படிப்படியாக அதிகரித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில், இன்றும் நாளையும் அதாவது மார்ச் 15, 16 ஆகிய இரண்டு நாட்கள் வெப்பம் இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனை அடுத்து, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும், நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.