பெரியார் பல்கலைக்கழகத்தில் யுஜிசி விதிக்கு எதிராக பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் தேர்வு ?

திங்கள், 24 ஜனவரி 2022 (22:35 IST)
இந்தியாவில் கிட்டத்தட்ட 650 ற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், அரசு பல்கலைக்கழகங்களில் முறையாக யுஜிசி (பல்கலைக்கழக மானியக்குழு) விதிகளை பின்பற்றி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

ஆனால் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் தேர்வு செய்யும் முறை, வெளியிடப்பட்டுள்ளது. இது முழுக்க, முழுக்க யுஜிசி விதிகளை பின்பற்றாமல், தன்னிச்சையாக செயல்பட்டு யாரோ, ஒருவரை உடற்கல்வி இயக்குநராக தேர்ந்தெடுப்பதற்காக, அந்த பல்கலைக்கழக தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மாற்றம் செய்யப்பட்ட தேர்வு மற்றும் அதற்கான தேர்வு முறைகளை நாளிதழ்களிலும் வெளியிட்டு தேர்வு முறைகளையும், விதிமுறைகளையும் நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், பெயர் குறிப்பிடாத ஒரு தமிழ்நாடு கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் சங்கங்களின் உறுப்பினர் ஒருவர் கூறும் போது,  பெரியார் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே, பல்வேறு முறைகேடுகள் ஏற்பட்டு, குறிப்பாக அதிமுக ஆட்சியில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றதாகவும், தற்போதுள்ள திமுக தலைமையிலான அரசு விசாரணை நடத்தி வருகின்றது. இந்த சூழ்நிலையில், பெரியார் பல்கலைக்கழகத்தின் Statue விதிமுறைகளின் படி தான், தேர்வு முறை வெளியிடப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும், பதிவாளரும் தெரிவித்துள்ளனர். இது முழுக்க, முழுக்க, தவறான செயல், யாரோ ஒருவரை, ஏற்கனவே தேர்வு செய்து வைத்து அவரிடம் மறைமுகமாக, ஒரு கனிசமான தொகையை பெறப்பட்டுள்ளது. இது போன்ற தேர்விற்கான விளம்பரங்கள் நாளிதழ்களில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதனை உடனடியாக நிராகரித்து விட்டு, யுஜிசி (பல்கலைக்கழக மானிய குழு) விதிகளின் படி மீண்டும், தேர்வு செய்யும் முறையை புதிதாக வெளியிட வேண்டும்,  உதாரணத்திற்கு ஒரு பல்கலைக்கழகத்தில் உள்ள கல்லூரியில் ஒருவர் உதவி பேராசிரியர் ஆக வேண்டும் என்றால், கண்டிப்பாக, யுஜிசி விதிப்படி தான், தேர்வு செய்யப்படுகின்றார்கள். அதே போல தான் உடற்கல்வி இயக்குநர் முறையும் கூட, ஆனால் பெரியார் பல்கலைக்கழகத்தில், உடற்கல்வி இயக்குநர் தேர்விற்கு, வயது 45 முதல் 50 வயது வரை இருக்க வேண்டுமென்றும், பெண்களுக்கு முன்னுரிமை என்றும், கூறி இருப்பது மிக மிக தவறான செயலாகும், இதனை தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் வேந்தர் ஆன, கவர்னரும், தமிழகத்தின் முதல்வருமான மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் உயர்கல்வித்துறை செயலாளர் ஆகியோர் கண்டுகொள்வார்களா ? என்பது தான் உடற்கல்வித்துறை இயக்குநர் சங்கங்கள் மற்றும் விளையாட்டு வீர்ர்களின் எதிர்ப்பார்ப்பாகும், ஏனென்றால் வருங்காலத்தில், நாளைய சமுதாயத்தினை நலமுடன் உருவாக்கும் மாணவ சமுதாயத்தினை சிறப்பாக உருவாக்ககூடிய கல்வியறிவு மற்றும் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் பெரியார் பல்கலைக்கழகத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது நியாயமா ? என்று சமூக நல ஆர்வலர்களும் பெற்றோர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதை மாற்றி மீண்டும் யுஜிசி விதிப்படி தேர்வு முறைகளை மாற்றி அந்த முறையை நாளிதழ்களில் வெளியிட்டு பின்னர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், அப்போது தான் திறமையான உடற்கல்வி இயக்குநர்களை தேர்ந்தெடுத்தால் மட்டுமே சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் உட்பட்ட கல்லூரிகளில் இருந்து சேலம் மாவட்டத்தில் இருந்தும் திறமையான விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு மாநில அளவில், தேசிய அளவில் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெறுவதற்கு விளையாட்டு வீரர்கள் உருவாக்கப்படுவார்கள். இல்லையென்றால் நீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை என்கின்றனர் தமிழ்நாடு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளின் உடற்கல்வி இயக்குநர்கள் சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்
 
மேலும்,. தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பல்கலைக்கழகங்களில் யுஜிசி விதிகளை பின்பற்றி தான், முறையாக, உடற்கல்வி இயக்குநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்