விளையாட்டாக பேசினேன்: ‘ஓசி’ சர்ச்சை குறித்து அமைச்சர் பொன்முடி!

வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (16:10 IST)
அமைச்சர் பொன்முடி பெண்கள் ஓசியில் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள் என்று பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளாகி நிலையில் தற்போது அவர் விளையாட்டாக பேசினேன் என்று விளக்கமளித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது பெண்கள் அனைவரும் தற்போது ஓசியில் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள் என்று பேசினார் 
 
அவரது இந்த பேச்சுக்கு பெண்கள் மத்தியில் பெரும் கண்டனங்கள் குவிந்தது. நாங்கள் ஒன்றும் ஓசியில் செல்லவில்லை என்றும் மக்கள் வரிப் பணத்தில் வாங்கிய பேருந்துகளில் தான் செல்கிறோம் என்றும் கூறியிருந்தனர்
 
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் பொன்முடி தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியபோது பெண்கள் பேருந்துகளில் ஓசியில் செல்கிறார்கள் என விளையாட்டாக பேசியதை இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் நான் பேச்சுவழக்கில் கூறியதை தவறாக புரிந்து கொண்டனர் என்றும் கூறியுள்ளார்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்