சென்னையில் ஆரம்பத்தில் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரை மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், ஆனால் தற்போது 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் இதை வைத்துப் பார்த்தால் இந்நேரம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தினமும் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆனால் சென்னையில் 1500 முதல் 2000 மட்டுமே பாதிப்பு ஏற்படுவதால் சென்னையில் பாதிப்பு பெரியதாக இல்லை என்றும் மருத்துவர்கள் கூறி வருகிறார். இன்றும் கூட சென்னையில் 1834 பேர்கள்தான் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
அதேபோல் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும் பரிசோதனையை அதிகரித்தால் இன்னும் அதிக அளவு கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்க படுவார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் தமிழகத்தின் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதத்தை பார்க்கும்போது பரிசோதனையை அதிகரித்தாலும் கொரோனா நோயாளிகள் அதிகரிக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறாது.
மேலும் தமிழகத்தை பொறுத்தவரை கொரோனாவால் குணமாகி வரும் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருவதும் பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது இதுவரை சுமார் 40 ஆயிரம் பேர் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சென்னை மற்றும் தமிழ்நாடு விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு விடும் என்றே நம்பப்படுகிறது