கடந்த ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பரவியது. தற்போது இதன் மூன்றாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவிய ஒமிக்ரான் தொற்று, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.200 ல் இருந்து, ரூ.500 ஆக அதிகரித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.