20 ஆயிரம் பேர்களுக்கு வேலை தருகிறது பே-டிஎம் நிறுவனம்: 10, 12 படித்திருந்தால் போதும்!

ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (17:52 IST)
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்த 20 ஆயிரம் பேர்களை வேலைக்கு எடுக்க உள்ளதாக பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது
 
பண பரிவர்த்தனை நிறுவனங்களில் ஒன்றான பே-டிஎம் நிறுவனம் இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இந்நிறுவனம் சிறு நகரங்களிலும் தங்களது நிறுவனத்தை வளர்ப்பதற்காக 20 ஆயிரம் பேர்களை பணியமர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது 
 
பே-டிஎம் செயலி மூலம் பணம் செலுத்துவது எப்படி என்பது குறித்து வணிகர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் நாடு முழுவதும் 20 ஆயிரம் விற்பனையாளர்களை பணியமர்த்த உள்ளதாகவும் இந்த பணிகளுக்கு பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு படித்த இளைஞர்களை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாகவும் பேடிஎம் நிர்வாகம் தெரிவித்துள்ளது 
குறிப்பாக பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வேலைக்கு ஆள் எடுக்க போவதாகவும் அவர்களை விடுவிக்க முடிவு செய்திருப்பதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்