கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜவஹர் பஜார், கோவை சாலை, திண்ணப்பா கார்னர், லைட் ஹவுஸ் கார்னர் அகிய வழிகளில் உள்ள டிராபிக் சிக்னல்கள் மீது, தகரங்களால் ஆன விளம்பர பாக்ஸ்கள் அமைக்கப்பட்டு பல வருடங்களாக பராமரிப்பு செய்யாமல் இருந்துள்ளது. கரூர் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டும் அதன் மீது கவனம் செலுத்தாத மாநகராட்சி நிர்வாகமும், போக்குவரத்து போலீஸார் மற்றும் கரூர் மாவட்ட காவல்துறையும் எந்த வித அக்கறையும் எடுக்காமல், மழை, காற்று, பனியில் நட்டு போல்ட்டுகள் துறுபிடித்து தொங்கியுள்ளது. தனியார் ஜவுளி டெக்ஸ்டைல் நிறுவனங்கள், மருத்துவமனைகளின் விளம்பரங்கள் அடங்கிய பதாதைகள் தொங்கவிடப்பட்ட நிலையிலும், பராமரிப்பு இல்லாத நிலையிலும், கோவை சாலை செங்குந்தபுரம் பிரிவு சாலையின் முன்புறம் வைக்கப்பட்ட விளம்பர பாக்ஸ் ஒன்று இரவு திடிரென்று ஒரு பக்கம் அறுந்து தொங்கியுள்ளது. நல்லவேளை மற்றொரு பக்கத்தில் பொறுத்தப்பட்ட கம்பிகளின் உதவியுடன் தொங்கி கொண்டிருந்தது.
போக்குவரத்து போலீசார் நின்று கொண்டிருந்த நிலையில், அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை நிறுத்தி அதன் மீது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு நபரை ஏற்றிவிட்ட போக்குவரத்து போலீசார் அதை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அந்த முயற்சி பலனளிக்க வில்லை, காரணம் உயரம் பற்றாத நிலையில், அந்த வழியாக வந்த ஆம்னி பேருந்தை நடு ரோட்டில் நிற்க வைத்து அதன் மீது, அதே நபரை ஏற்றி வைத்து பதாகையை அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.