10% இடஒதுக்கீடு: இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர் வரவேற்பு

புதன், 9 நவம்பர் 2022 (17:39 IST)
பொருளாதாரத்தில் நலிந்த உயர்சாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த தீர்ப்பு சர்ச்சைக்குரியதாக உள்ளது என தமிழக அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்தது. குறிப்பாக திமுக இந்த தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது என்பதும் இதனை அடுத்து அடுத்தகட்ட ஆலோசனைக்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுமே இந்த தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து வந்தாலும் காங்கிரஸ் கட்சி இந்த தீர்ப்பை ஏற்கனவே வரவேற்றது. இந்த நிலையில் தற்போது இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் 10 சதவீத இட ஒதுக்கீடு தீர்ப்பை வரவேற்றுள்ளார்.
 
பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை இந்திய ஜனநாயக கட்சி வரவேற்கிறது என்றும் அனைவரும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தங்களின் உரிமைகளை பெற்ற இந்த சட்டம் வழிவகுத்தது என்றும் பார்வை என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்