குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடல்களை பெற மாட்டோம்.. பல்லடம் அருகே பரபரப்பு..!

திங்கள், 4 செப்டம்பர் 2023 (18:57 IST)
பல்லடம் அருகே இன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளிகளை கைது செய்யும் வரை கொலையானவர்களின் உடல்களை பெற மாட்டோம் என உறவினர்கள் திடீரென போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடல்களை பெற மாட்டோம் என்றும் கொலையானவர்களின் உறவினர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் உறவினர்கள், ஊர்ப்பொதுமக்கள், பாஜகவினர் பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட மருத்துவமனை வளாகம் முன்பு மறியலில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீஸ் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பாதுகாப்புக்காக அந்த பகுதியில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்