திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் மாதப்பூர் ஊராட்சியின் அமமுக செயலாளர் திரு.பன்னீர்செல்வத்தின் தாயார் ரத்தினம்மாள் உட்பட அவரது குடும்பத்தைச் சார்ந்த மேலும் மூவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர், தொடர்ந்து அரங்கேறி வரும் சட்டம், ஒழுங்கு பிரச்னைகளில் தனி கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துவதோடு இந்த கொலைச் சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.