கயிறு நழுவி பாதியில் நின்ற ரோப் கார்.. பழனியில் பெண் பக்தர்கள் அலறியதால் பரபரப்பு..!

Mahendran

வியாழன், 25 ஜூலை 2024 (17:25 IST)
பழனி மலைக்கு செல்லும் ரோப் கார் இயங்கும் இயந்திரத்தில் உள்ள சக்கரத்திலிருந்து திடீரென கயிறு நழுவியதால் பாதியில் நின்ற ரோப் காரால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கீழே இருந்து மேலே செல்லும் பெட்டியில் அமர்ந்திருந்த பக்தர்கள் ஏணி மூலம்  பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர்
 
பழனி மலைக்கு செல்லும் ரோப் கார் இயங்கும் இயந்திரத்தில் உள்ள சக்கரத்திலிருந்து திடீரென கயிறு நழுவியதால் ரோப் கார் இருபுறங்களிலும் செல்ல முடியாமல் நடுவழியில் நின்றதால் பக்தர்கள் கூச்சலிட்டனர்
 
ரோப் கார் இயக்கத்தை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பாதியில் நின்ற ரோப் காரில், 3 பெண் பக்தர்கள்  வெகு நேரமாக தவித்து வருகின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
 
பழனியில் பக்தர்கள் வசதிக்காக ரோப் கார் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ரோப் கார் மாதம் ஒருமுறை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்களின் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக ரோப் கார் அவ்வப்போது பராமரிக்கப்பட்டு வந்தும் சில சமயம் திடீரென பாதியில் நின்று வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 
 
எனவே ரோப் கார் தரத்தை சரியானபடி வைத்திருக்க வேண்டும் என்றும் அப்போதுதான் பக்தர்கள் நம்பிக்கையுடன் பயணம் செய்வார்கள் என்றும் இந்த சம்பவம் குறித்து பழனி முருகன் பக்தர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்