மனைவியுடன் நெருக்கமான தொடர்பில் உள்ளவர் தனது சொத்துக்களை எழுதி கொடுக்க கொலை மிரட்டல் விடுத்ததால், பாதிக்கப்பட்ட டெக்ஸ் தொழிலாளி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவரது மனைவி கவிதா வயது 40. பதினெட்டு வயதில் ஒரு மகன் உள்ளார். திருமணத்தின்போது தனது சொத்துக்களில் பாதி தனது மனைவியின் பெயரில் எழுதி வைத்திருந்தார். மனைவி கவிதா இதே பகுதியை சேர்ந்த சிவசங்கர் என்பவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துவருகிறார். இந்நிலையில் சிவசங்கரன் மீதி உள்ள சொத்துக்களையும் மனைவி பெயரில் எழுதி தருமாறு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.
இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு, தாந்தோணி காவல்நிலையம் போன்றவற்றில் புகார் அளித்திருந்தார் .இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி ,இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த சிவசுப்ரமணியம் மறைத்து எடுத்து கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார் .