ரேஷன் கடைகளுக்கு உத்தரவு

செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (15:06 IST)
ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காக வரும் குடும்பத்தாரை அலைக்கழித்தால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ரேசன் கடைகளில் பொதுமக்களை அலைக்கழித்தால் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்; ரேசன் கடைகளுக்குச் செல்ல முடியாத முதியவர்களுக்குப் பதிலாக குடும்ப உறுப்பினர்கள் எவரேனும் சென்று பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.  

மேலும் ரேசன் கடைகளில் 5 வயதிற்கு மேட்பட்டவர்கள் வந்து கைரேகை பதிந்துவிட்டுப் பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம் எனவும்,ரேசன் கடைக்கு வரமுடியாதவர்கள் அத்தாட்சி அளிக்கப்பட்ட நபர்கள் மூலம் ரேசனில் பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் 16-08-21 அன்று சட்டப்பேரவையில்  உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்