வலுவடையும் காற்றழுத்தம்: தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்!!

திங்கள், 1 நவம்பர் 2021 (13:02 IST)
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைகிறது. 

 
கடந்த 26 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைகிறது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
இதனால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தோடு மதுரை, தென்காசி, ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்