தேர்தல் அதிகாரிக்கு உதவியாக ஓபிஎஸ் உறவினர் - திட்டம் என்ன?

வெள்ளி, 8 டிசம்பர் 2017 (12:10 IST)
ஆர்.கே.நகரில் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் வேலுச்சாமிக்கு உறுதுணையாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் உறவினர் நியமிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 
ஆர்.கே. நகர் தேர்தல் தொடர்பாக வேலூச்சாமிக்கு உதவியாக ஓ.பன்னீர் செல்வத்தின் உறவினர் பூபதி நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் வேலுச்சாமியின் அருகிலேயே அமர்ந்திருக்கிறார். விஷால் தொடர்பாக வெளியான பல புகைப்படங்களில் அவரை பார்க்க முடிகிறது.  வேட்பு மனு பரீசிலனைகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார்.
 
சென்னை மாநகராட்சியில் உதவி பொதுமக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து வரும் பூபதி ஓ.பி.எஸ்-ஸின் உறவினர் ஆவார். ஓ.பி.எஸ்-ஸின் உதவியால் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஏ.பி.ஆர்.ஓ-வாக பணியமர்த்தப்பட்டார். அதன் பின் ஓபிஎஸ்-ஸின் சொந்த மாவட்டமான தேனிக்கு அவர் நியமிக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்னர்தான் அவர் சென்னை மாநகராட்சிக்கு மாற்றப்பட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை மனதில் வைத்துதான் அவர் தற்போது அங்கு நியமிக்கப்பட்டிருக்கிறார் எனக் கூறப்படுகிறது. 
 
திட்டமிட்டு தவறுகளை செய்வதற்காக பூபதி அங்கு பணியமர்த்தப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகி விஸ்வரூபம் எடுத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்