கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி இந்தியாவில் தொடங்கிய மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று மே 19 ஆம் தேதி முடிவடைந்தது. பிறகு உலகமே எதிர்பார்த்த இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதற்கான பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 23 ஆம் தேதி வெளியானது. அதில் பாஜக கூட்டணி சார்பில் 354 தொகுதிகளும், பாஜக தனிப்பெரும்பான்மையாக 303 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதற்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதனால் அதிமுக தரப்பில் இருந்து ஒரு எம்பியாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளா ரவீந்தரநாத் குமார் மத்திய அமைச்சராவர் என்று எதிர்ப்பார்த்திருந்த அதிமுக கட்சியினர் தற்போது கவலையில் ஆழ்ந்துள்ளதாகத் தகவல் தெரிகிறது. ஆனால் இன்னும் மத்திய அமைச்சர்கள் பற்றிய முறையான தகவல்கள் வெளியாகவில்லை இன்னும் சற்று நேரத்தில் அனைத்து யூகங்களுக்கும் முடிவு தெரிந்துவிடும்.