ஓபிஎஸ் மகனுக்கு முக்கிய பதவி: கட்சிக்குள் சலசலப்பு!!

சனி, 22 ஜூன் 2019 (08:32 IST)
அதிமுக மக்களவை குழு தலைவராக ரவீந்திரநாத் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். 
 
மக்களவை தேர்தலில் அதிமுக தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் சமீபத்தில் எம்பியாக பதவியேற்றுக்கொண்டார். 
 
இந்நிலையில், அதிமுக மக்களவை குழு தலைவராக ரவீந்திரநாத் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் அறிவித்துள்ளனர். இது குறித்து மக்களவை சபாநாயகருக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. 
அதேபோல், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
எதிர்கட்சியினர் அரசியல் அனுபவமிக்க நபர்களை முக்கிய பொறுப்பில் நியமனம் செய்யும் நிலையில் ஒரு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரவீந்திரநாத்திற்கு முக்கிய பதவி வழங்கியுள்ளது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்