சென்னை மறைமலைநகர் பகுதியில் பிரபல கார் நிறுவனமான ஃபோர்டின் ஆலை பல காலமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அங்கிருந்து ஃபோர்டு நிறுவனம் வெளியேற உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பணி புரியும் 4 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒருவாரமாக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.