நீதிபதியிடம் மன்னிப்பு கேட்ட ஓபிஎஸ்: என்ன காரணம்?

வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (15:33 IST)
அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரணை செய்து வரும் நீதிபதியிடம் ஓபிஎஸ் தரப்பு மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதி இடம் மாற்ற வேண்டும் என தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் ஓபிஎஸ் தரப்பினரும் கோரிக்கை விடுத்ததாகவும், இதனையடுத்து அந்த மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டு ஓபிஎஸ் சார்பில் மன்னிப்பும் கோரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
 தலைமை நீதிபதிக்கும் அளிக்கப்பட்ட கடிதத்தை திரும்பப் பெறுங்கள் என நீதிபதி கிருஷ்ணன் ஓபிஎஸ் தரப்புக்கு அறிவுறுத்த இதை அடுத்து ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டு அந்த மனுவை திரும்பப் பெற்றதாக கூறப்படுகிறது
 
 மேலும் மன்னிப்பு கோரியது உள்பட அதனிடம் கூறிய அனைத்து அனைத்தையும் மனுவாக தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்புக்கு நீதிபதி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே ஓபிஎஸ் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் தற்போது நீதிமன்றத்தில் அவரது தரப்பினர் மன்னிப்பு கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்