நீதிமன்றத்தில் ஆஜராக சவுக்கு சங்கருக்கு உத்தரவு: நீதிபதிகள் குறித்து சர்ச்சை பேட்டி!

வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (18:03 IST)
தனியார் ஊடகம் ஒன்றுக்கு சவுக்கு சங்கர் பேட்டி அளித்த போது நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதை அடுத்து சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனியார் யூடியூப் சேனலில் நீதித்துறை குறித்து அவதூறாகப் பேசியதாக வழக்கு தொடரப்பட்டது
 
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டதை அடுத்து அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்
 
நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அடங்கிய சிறப்பு அமர்வு இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது
 
மேலும் சவுக்கு சங்கருக்கு மாதம் 43 ஆயிரம் வீதம் 13 ஆண்டுகளாக தற்போது வரை தோராயமாக 65 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளதாகவும்  நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்