அப்பாவுக்கும் மகனுக்கும் இப்படி ஒரு அதிர்ஷ்டமா? ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஓபிஎஸ் குடும்பம்

வியாழன், 30 மே 2019 (17:33 IST)
முதல்முறையாக எம்.எல்.ஏவான ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகவும், முதல்முறையாக எம்பியான அவரது மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவியும் கிடைத்துள்ளதால் அப்பாவுக்கும் மகனுக்கும் இப்படி ஒரு அதிர்ஷ்டமா? என தமிழக அரசியல் களம் ஆச்சரியம் அடைந்துள்ளது
 
ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2001ஆம் ஆண்டு தேர்தலில் முதல்முறையாக பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். அந்த தேர்தலில் ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் போட்டியிட்டதால் அவரது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து முதல்முறையாக எம்.எல்.ஏ ஆன ஓ.பன்னீசெல்வம் அவர்களுக்கு முதல்வர் ஆகும் அதிர்ஷ்டம் கிடைத்தது. அதன்பின் அமைச்சர், முதல்வர், அமைச்சர், மீண்டும் முதல்வர் பின்னர் துணை முதல்வர் என ஓபிஎஸ் தமிழக அரசியலில் இன்னும் அசைக்க முடியாத நபராக உள்ளார்.
 
இந்த நிலையில் ஓபிஎஸ் போலவே முதல்முறையாக தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வென்ற அவரது மகன் ரவீந்திரநாத் குமார், தற்போது மத்திய அமைச்சராக பதவியேற்கவுள்ளார். எந்த ஒரு கட்சியிலும் முதல்முறையாக எம்.எல்.ஏ ஆனவர் முதல்வராகவும், முதல்முறையாக எம்பி ஆனவர் அமைச்சராகவும் தந்தை-மகனாக இல்லை. எனவே ஓபிஎஸ் குடும்பம் தமிழக அரசியலில் மட்டுமின்றி இந்திய அரசியலிலேயே அதிர்ஷ்டகாரர்களாக கருதப்படுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்