ஜூலை 12 தினகரனை சந்தித்தேன்: ஒப்புக்கொண்ட ஓபிஎஸ்

வெள்ளி, 5 அக்டோபர் 2018 (19:53 IST)
இன்று தினகரன் அளித்த பேட்டி அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. துணை முதல்வர் ஓபிஎஸ் தன்னை வந்து சந்தித்ததாகவும், அந்த சந்திப்பின் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விட்டுவிட்டு என்னுடன் வருவதாகாவும் அவர் கூறினார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 
 
மேலும், தினகரன் அதிமுகவுடன் ஒன்றாக இணைவது தொடர்பாக ஒபிஎஸ் அவரது மகன் ஆகியோர் என்னை அழைத்தனர். அந்த சந்திப்பின் போது தர்மயுத்தம் நடத்தியது தவறுதான் என மன்னிப்பு கேட்டார் என்றும் கூறினார். 
 
இதற்கு துணை முதல்வர் பன்னீர் செல்வம் பின்வருமாறு பதில் அளித்துள்ளார். தினகரன் குழப்பமான மனநிலையில் இவ்வாறு பேசி வருகிறார். கட்சியையும் ஆட்சியையும் தனது குடும்பத்தின் பிடியில் கொண்டு வருவதற்காகவே அவர் இவ்வாறு செய்து வருகிறார் என கூறினார். 
 
அதோடு, நான் 2017 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி தினகரனை சந்தித்தேன். நனக்கும் அவருக்கு பொதுவான நண்பர் ஒருவர் மூலமாக இருவரும் சந்தித்துக்கொண்டோம். அப்போது தினகரன் ஆட்சி கவிழும் கவிழும் என அனைத்து பேட்டிகளும் கூறி வந்ததால் நான் அவரை சந்தித்தேன். ஆனால் அந்த சந்திப்பின் போது தினகரன் கூறியது போல எதுவும் நடக்கவில்லை. 
 
தினக்ரன் திருந்திவிட்டதாக எண்ணி நான் அவரை சந்திக்க ஒப்புக்கொண்டேன். இன்று தினகரன் இவ்வாறு பேட்டி அளித்ததும், இருவருக்கும் நண்பராக இருந்த அந்த நபர் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டார். என் வாழ்க்கையின் நான் செய்த பெரிய தின்கரனையும் இங்களையும் சந்திக்க வைத்ததுதான் என வருத்தினார் என்றும் கூறியதாக ஓபிஎஸ் பேட்டில் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்