மோடியை எதிர்த்து பிரதமர் வேட்பாளரே இல்லையா? பரிதாபத்தில் எதிர்க்கட்சிகள்..!

Siva

ஞாயிறு, 4 பிப்ரவரி 2024 (15:04 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் மோடி பிரதமர் வேட்பாளர் என ஒரு வருடத்திற்கு முன்பே பாஜக தரப்பு அறிவித்த நிலையில் எதிர்க்கட்சி தரப்பிலிருந்து இன்னும் பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமல் இருப்பது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. 
 
பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி என்ற கூட்டணி அமைக்கப்பட்ட நிலையில் அந்த கூட்டணி தற்போது கிட்டத்தட்ட சிதறிவிட்டது என்று சொல்லலாம். ஒரு பக்கம் மம்தா பானர்ஜி தனித்து போட்டியிடுவதாக அறிவித்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியும் தனித்து போட்டியிடுகிறது. 
 
நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில் காங்கிரசை ஒரு கட்சியாகவே அகிலேஷ் யாதவ் மதிக்கவில்லை. மொத்தத்தில் காங்கிரசை மதிக்கும் ஒரே கட்சி திமுக தான் என்றாலும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் கூட இதுவரை சொல்லவில்லை என்பதுதான் பெரும் சோகம். 
 
இந்த நிலையில் பிரதமர் கனவில் மம்தா பானர்ஜி, சரத் யாதவ்  உள்பட ஒரு சிலர் இருந்தாலும் இன்னும் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லாமல் இருப்பது மோடிக்கு சாதகமாகவும் எதிர்கட்சிகளுக்கு பின்னடைவாகவும் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்