எதிர்கட்சிகள் புறக்கணித்த சுதந்திர தினவிழா - எடப்பாடி அணி அதிர்ச்சி

செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (12:25 IST)
சென்னை தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்ட சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தை தமிழக எதிர்கட்சிகள் புறக்கணித்தன.


 

 
71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
 
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தலைமை செயலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 8.15 மணியளவில் அங்கு வந்தார். அப்போது அவருக்கு காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சிறப்பு மரியாதை செலுத்தினர்..
 
அதன்பின் சரியாக 8.30 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதன் பின் அவர் தனது சுதந்திர தின விழா உரையை நிகழ்த்தினார்.  
 
இந்நிலையில், இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடப்பட்டிருந்தது. ஆனால், எந்த கட்சி எம்.எல்.ஏக்களும் இதில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். இது எடப்பாடி அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்