ஜிப்மர் மருத்துவமனையில் ஓபி பிரிவு இயங்காது: அதிர்ச்சி அறிவிப்பு

வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (15:47 IST)
புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் வரும் 26ஆம் தேதி முதல் ஓபி பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் ஓபி மூலம் ஏராளமான மக்கள் தினமும் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து தற்போது ஓபி நோயாளிகள் மீது மருத்துவர்கள் கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது 
 
இந்த நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வரும் 26ஆம் தேதி முதல் வெளிப்புற நோயாளிகள் என்று கூறப்படும் ஓபி சிகிச்சை பிரிவு தற்காலிகமாக இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ஓபியில் இதற்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்