புதுவை பல்கலைக்கழகம் நாளை முதல் மூடப்படுவதாக அறிவிப்பு: ஹாஸ்டல் மாணவர்கள் அதிர்ச்சி

வியாழன், 22 ஏப்ரல் 2021 (18:57 IST)
புதுவை பல்கலைக்கழகம் நாளை முதல் மூடப்படுவதாக அறிவிப்பு:
தமிழகத்தைப் போலவே புதுவையிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கொரோனா நோயை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை புதுவை மாநில அரசு எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் அனைவருக்கும் மாஸ்க் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு ரூபாயில் அரசே மாஸ்குகளை விற்பனை செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் அதிகம் பரவி வருவதை காரணமாக புதுவையில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதுகுறித்து வெளியான அறிவிப்பு ஒன்றில், ‘கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் நாளை முதல் வரும் 27ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 25-ஆம் தேதிக்குள் விடுதியை காலி செய்ய மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவு இருப்பதால் ஹாஸ்டல் மாணவர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்