கஞ்சா விற்பனை செய்த ஆன்லைன் உணவு டெலிவரி நபர்.. பொறிவைத்து பிடித்த போலீசார்..!
செவ்வாய், 9 மே 2023 (18:36 IST)
ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மற்றும் என்று தமிழக முழுவதும் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் டெலிவரி பாய்கள் அதிகமாக பணிபுரிந்து வருகின்றனர் என்பதும் இவர்களுக்கு மிகவும் குறைவான சம்பளமே கொடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் என்ற பகுதியில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர் அந்த பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து அந்த உணவு டெலிவரி நபரை பிடிப்பதற்கு குறி வைத்து காத்திருந்த போலீசார் அவர் கஞ்சா விற்பனை செய்தபோது பொறி வைத்து பிடித்தனர்.
அந்த நபரின் பெயர் பத்மநாபன் என்றும் அவர் எங்கிருந்து கஞ்சா வாங்குகிறார் யாரிடம் விற்பனை செய்கிறார் என்பது குறித்து விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.