அதிமுகவில் இருந்து பிரிந்து தனி அமைப்பாக செயல்பட்டு வரும் ஓ பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இணைந்து இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் சமீபத்தில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அவரது பெயரில் உள்ள மேலும் 4 பேர் அடுத்தடுத்து வேட்புமனு தாக்கல் செய்ததால் வாக்காளர்கள் குழப்பம் அடைவார்கள் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் முடிவடையும் சில நிமிடங்களுக்கு முன் இன்னொரு ஓ பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து மொத்தம் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்பட ஆறு பேர் ஒரே பெயரில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது