கூவத்தூரில் இருந்து தப்பி சென்றவரும், நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தவ்ருமான கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அருண்குமார் நேற்று ஓபிஎஸ் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இதனால் அவருக்கு ஆதரவு கொடுக்கும் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.
ஆனால் நேற்று திருவெற்றியூரில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் விரைவில் தங்களின் அணிக்கு வருவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.