நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் கொரொனா பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி துவக்கம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 10, 978 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.