நோயாளியாக நடித்து தங்கத்தை கடத்திய முதியவர் கைது

வியாழன், 24 ஜூன் 2021 (09:40 IST)
துபாயிலிருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில் நோயாளியாக நடித்து சக்கரநாற்காலியில் வந்தவர் தங்கக்கட்டிகளை கடத்தியது கண்டுபிடிப்பு. 

 
துபாயிலிருந்து சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று காலை வந்தது.அதில் வந்த  பயணிகளை சென்னை விமானநிலைய குடியுறிமை அதிகாரிகள் சோதனையிட்டனா்.அப்போது சென்னையை சோ்ந்த முகமது அபுபக்கா்(62) என்பவா் நோயாளி என்று பரிந்துரைத்து சக்கர நாற்காலியில் வைத்து விமானநிலைய ஊழியா் வெளியே தள்ளிவந்தார். 
 
சுங்கச்சோதனை பிரிவில் வழக்கமாக சக்கரநாற்காலி பயணியை நிறுத்தி சோதனையிடாமல் அனுப்பி விடுவாா்கள்.எனவே விமானநிலைய ஊழியா் கிரீன் சேனல் வழியாக சக்கரநாற்காலியை தள்ளிக்கொண்டு சென்றார். ஆனால் சுங்கத்துறையினருக்கு அந்த நோயாளி பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீண்டும் உள்ளே வரவழைத்து சோதனையிட்டனா்.
 
இதையடுத்து சக்கரநாற்காலியில் நோயாளியாக வந்த முகமது அபுபக்கா் சுங்கத்துறையினரிடம் கடும் வாக்குவாதம் செய்தார். ஆனாலும் அதிகாரிகள் அவரை தொடா்ந்து சோதனையிட்டனா்.அவா் அணிந்திருந்த பேண்ட் உள்பாக்கெட்களில் 4 தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா். அதன் மொத்த எடை 465 கிராம். சா்வதேச மதிப்பு ரூ.20 லட்சம். இதையடுத்து நோயாளியாக நடித்துவந்த பயணியை சுங்கத்துறையினா் கைது செய்து, தங்கக்கட்டிகளையும் பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்