22வது இடத்தில் ஓ பன்னீர்செல்வம்.. தேர்தல் ஆணையமும் வஞ்சிக்கிறதா?

Mahendran

சனி, 6 ஏப்ரல் 2024 (08:20 IST)
ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேட்சையாக போட்டியிடும் ஓ பன்னீர் செல்வத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 22 ஆவது இடம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் நிலையில் அவரது பெயரிலேயே 5 வேட்பாளர்கள் அதே தொகுதியில் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதலில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் அதன் பின்னர் சுயேட்சைகள் என வரிசையாக வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்படும் நிலையில் ஓ பன்னீர்செல்வத்தின் பலாப்பழம் சின்னம் 22 ஆவது இடத்தில் அதாவது கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தான் உள்ளதாக தெரிகிறது.

அனைத்து பன்னீர் செல்வங்களின் இனிசியலை கணக்கில் எடுத்துக்கொண்டு அகரவரிசைப்படி இந்த இடம் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் அதன்படி ஓ பன்னீர்செல்வதற்கு ஒதுக்கப்பட்டது 22 வது இடம் என்பது சரிதான் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரத்தில் கூறப்படுவதாக தெரிகிறது.

தன்னுடைய பெயரும் சின்னமும் 22-வது எப்படி தேடி பிடித்து வாக்காளர்கள் ஓட்டு போடுவார்கள் என்ற அதிருப்தியில் ஓ பன்னீர்செல்வம் இருப்பதாக கூறப்படுகிறது.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்