நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கபட்ட பிறகு சி விஜில் புகார் செயலி மூலம் தமிழ்நாட்டில் 2,168 புகாரும் இந்தியா முழுவதும் 1,25,939 புகாரும் வந்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் எங்கெல்லாம் பணம், பரிசு பொருட்கள், தேர்தல் விதி மீறல், அனுமதி இல்லாமல் வீட்டு சுவற்றில் அரசியல் கட்சி சின்னம் வரைதல் உள்ளிட்ட புகார்களை மக்களே செல்போன் செயலி மூலம் புகார் அளிக்க இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செயலிதான் (சி விஜில்) செயலி.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கபட்ட பிறகு 16.3.24ம் தேதி முதல் 3.4.24 வரையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் (சி விஜில்) செயலியில் இந்தியா முழுவதிலிருந்தும் 1,25,939 புகாருகள் வந்துள்ளன. அதில் 1,25,939 புகார்கள் விசாரணை நடத்தி முடித்து வைக்கபட்டுள்ளது.
புகார் வந்த 100 நிமிடத்தில் விரைந்து 1,13,481 புகார்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கபட்டதாகவும். தற்போது 388 புகார்கள் மட்டுமே விசாரணையில் இருப்பதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தகவல் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் 2,168 புகார்கள் வந்தத்தில் 2,139 விசாரணை நடத்தி நிவர்த்தி செய்திருப்பதாகவும், புகார் வந்த 100 நிமிடத்தில் விரைந்து செயல்பட்டு 1,071 புகார்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், 29 புகார்கள் மட்டுமே தற்போது விசாரணையில் இருப்பதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறபட்டுள்ளது.
இதேபோல் இந்திய அளவில் மேகாலையாவில் குறைந்தபட்சமாக 6 புகார்களும், லாடாக், மிசோரம், யூனியன் பிரதேசங்களும் நாகாலாந்து மாநிலத்தில் ஒரு புகார்கள் கூட சி விஜில் புகார் செயலியில் பதிவாகவில்லை என்பது குறிப்பிடதக்கது.