இந்நிலையில் பாபாவின் சுஷில்ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி குழந்தைகள் நல குழுமம் பரிந்துரை செய்துள்ளது. அப்படி அப்பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்தால் அங்குள்ள மாணவ, மாணவிகள் வேறு பள்ளியில் மாற்றலாவதற்கு என்ன வழிமுறைகள் என்பதை அரசு அறிவிக்குமா எனக் கேள்வி எழுந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து நடிகர் மயில்சாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆடம்பரமாக, ஆசிரமம் வைத்துள்ளவர்கள் யாரும் சாமியார்கள் கிடையாது. இதில் முக்கால் வாசிப்பேர் பித்தலாட்டக் காரர்களாக உள்ளனர். இவர்கள் ஆடம்பராக வாழ்ந்து, குழந்தைகளையும், மற்றவர்களையும் ஏமாற்றி வருகிறார்கள்… இவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்…ஜாதி, மதம் அடிப்படையில் முன்னேற நினைப்பவர்கள் அனைவரும் ஏமாற்றுபவர்கள்தான் எனத் தெரிவித்துள்ளார்.