பிரதமருக்கு கடிதம் எழுதுவதால் எந்தவிதப் பயனும் இல்லை: முக ஸ்டாலின்

திங்கள், 20 ஜனவரி 2020 (22:12 IST)
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்க மாநில அரசிடம் அனுமதி பெற தேவையில்லை என்றும், அதேபோல் திட்டம் தொடங்கும் இடத்தின் அருகில் உள்ள பொது மக்களிடம் கருத்து கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது 
 
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதிமுகவும் இந்த அறிவிப்புக்கு தனது கண்டனத்தை தெரிவித்ததோடு இது குறித்து பிரதமருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்
 
ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆரம்பிக்கும் முன்னர் பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். முதல்வரின் இந்த கடிதம் குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கூறியதாவது:
 
ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதி முதல்வர் நாடகம் நடத்தியுள்ளதாகவும், நீட் விலக்கு கோரி இரண்டு முறை அனுப்பப்பட்ட தீர்மானங்களை பொருட்படுத்தாத பிரதமர் இந்த கடிதத்திற்கு செவி சாய்ப்பார்? என்றும் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு பதில் பிரதமருக்கு கடிதம் எழுதுவதால் எந்தவிதப் பயனும் ஏற்படாது என்றும் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்