தனியார் பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது: அரசு அதிரடி அறிவிப்பு!

திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (10:49 IST)
கொரோனாவால் பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது 
 
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் திரு நந்தகுமார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘கொரோனா காலகட்டத்தில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் இறந்து இருந்தால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் நடப்பு கல்வியாண்டில் பள்ளிக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிலை இருந்தால் அவர்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி ஆணையர் தெரிவித்திருக்கிறார்
 
கொரோனா காலத்தின்போது கிட்டத்தட்ட 200 மாணவர்களின் பெற்றோர்கள் இறந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்த தகவலை அடுத்து அந்த 200 மாணவர்களும் தனியார் பள்ளியில் படித்தாலும் கட்டணம் கட்டவேண்டிய அவசியம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் இந்த கட்டணத்தை அரசு செலுத்துமா? அல்லது எந்த வகையில் சலுகை அளிக்கப்படுகிறது என்பது குறித்து தெளிவான விளக்கங்கள் தெரிவிக்கப்படவில்லை.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்