நேரடி செமஸ்டர் தேர்வுகள் எப்போது? அமைச்சர் தகவல்

வெள்ளி, 19 நவம்பர் 2021 (17:33 IST)
அனைத்து கல்லூரிகளிலும் இந்த ஆண்டு நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்றும் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறாது என்றும் தமிழக அரசு உறுதிபடக் கூறி உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இதனை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். வகுப்புகள் ஆன்லைனில் நடத்திவிட்டு தேர்வுகளை மற்றும் நேரடியாக நடத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று மாணவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்
 
இந்த நிலையில் மாணவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார்
 
மாணவர்கள் நேரடி தேர்வுக்கு ஒரு மாதம் அவகாசம் கேட்டனர். ஆனால் தமிழக அரசு இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கியுள்ளது என்றும் ஜனவரி 20ஆம் தேதிக்கு பின்னரே நேரடி தேர்வுகள் நடைபெறும் என்றும் அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்