திமுகவின் இரட்டை வேடத்தால் நாம் ஏமாந்தது போதும்.. அமைச்சர் அன்பில் குறித்து அண்ணாமலை..!

Mahendran

வெள்ளி, 7 மார்ச் 2025 (10:10 IST)
தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என்றும் மும்மொழி கொள்கை கடைபிடிக்கப்படாது என்றும் திமுக அரசு உறுதியாக கூறிவரும் நிலையில் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் மட்டும் மும்மொழி கொள்கைக்கு அனுமதிப்பது ஏன் அரசு பள்ளி மாணவர்கள் கொள்கையை படிக்க தடைப்பது ஏன் என்ற கேள்வியை பாஜக  கேள்வி எழுப்பி வருகின்றது.
 
இந்த நிலையில் நேற்று தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிபிஎஸ்இ பள்ளி விழாவில் கலந்து கொண்ட நிலையில் அண்ணாமலை இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
நேற்று, தமிழகத்தின் பள்ளிக் கல்வி அமைச்சர், பல மொழிகளைக் கற்றுக் கொடுப்பதைப் பாடத்திட்டமாகக் கொண்ட ஒரு தனியார் CBSE பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். ஆனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல மொழிகள் கற்கும் வாய்ப்பு கிடையாது என்று கூறுகிறார்.
 
இத்தனை ஆண்டு காலம் இவர்களின் இதுபோன்ற இரட்டை வேடத்தால் நாம்  ஏமாந்தது போதும். நமது அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் கல்வியில் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால்,
 
http://puthiyakalvi.in இணையதளத்தில் உங்கள் ஆதரவைப் பதிவு செய்யவும்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்