காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை: வானிலை ஆய்வு மையம்

செவ்வாய், 23 நவம்பர் 2021 (13:11 IST)
வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் புயலாக மாறும் வாய்ப்பு இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வங்ககடலில் மூன்றாவது காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
எனினும் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது திருநெல்வேலி இராமநாதபுரம் தூத்துக்குடி மதுரை விருதுநகர் மற்றும் தென்காசி கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் நாளை முதல் இடியுடன் கூடிய கனமழை ஒரு சில நாட்களுக்கு பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்