இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! – வானிலை ஆய்வு மையம்!

செவ்வாய், 23 நவம்பர் 2021 (08:14 IST)
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் இரண்டு முறை காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி கரையை கடந்துள்ளன.

இந்நிலையில் இன்று வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கு பகுதியில் நகரத்தொடங்கி இலங்கைக்கும், தென் தமிழகத்திற்கும் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம்  கணித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்