உருவானது நிவர் புயல்; மாலைக்குள் தீவிர புயலாக மாறும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

செவ்வாய், 24 நவம்பர் 2020 (08:37 IST)
தமிழகத்தின் அருகே வங்க கடலில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் அருகே தெற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறியது முதலாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இன்று மாலைக்குள் தீவிர புயலாக மாற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிவர் புயல் உருவாகியுள்ள நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டிணம், திருவாரூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. நாளை பிற்பகலில் நிவர் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்